39 வது வார்டு பகுதி இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முக நாதன் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகரம் 39 வது வார்டு இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் விளையாட்டு உபகரண ங்களை, மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய திருச்சிற்றம்பலத்திற்கு " TUTY SPARTANS " இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.