• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் : சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடத்திற்கே தேடி சென்று நேரடியாக கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதியம்புத்தூர், புதுப்பாண்டிபுரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம் ஜம்புலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ஓட்டப்பிடாரத்தில் ஏற்கனவே செயல்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

பொதுமக்களின் மனுக்களை  பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், சிவில் சப்ளை மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுசிலா, நில எடுப்பு தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி, திமுக நகரச் செயலாளர் லிங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், வர்த்தக அணி முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்!

முதலூர் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சித்த மருந்துகள் வழங்கும் முகாம்!

  • Share on