• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளே... இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளர்.

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் சாந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2024-25-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 80 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண்மைத்துறை மூலம் தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற மானியம் வழங்கப்படும். தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்கள், மரங்கள், சிறுகற்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும், நிலத்தினை சமன் செய்து, உழவு மேற்கொள்ள எக்டர் ஒன்றிற்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 600 வரை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை மானியம் பெறலாம்.

இந்த திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை மானியம் பெறலாம். தனிப்பட்ட விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட்ட தரிசு நிலங்களில் பயிர்களை தேர்வு செய்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும். இதர திட்டங்களை ஒருங்கிணைத்து சாகுபடி செய்யலாம்.

எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விவரம் பெற்று தங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தாய்லாந்து சென்ற தூத்துக்குடி இளைஞர் எங்கே? மாயமானதன் பின்னணி என்ன? கணவரை கண்டுபிடித்த தர ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை!

  • Share on