தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி 2ம் தேதி மறியல், 3-ம் தேதி தாலுகா அலுவலகத்தில் தர்ணா, 4-ம் தேதி மறியல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர் களை கைது செய்தனர்