சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தட்டார்மடத்தில் நடைபெற்றது.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தட்டார்மடம் ஸ்ரீபலவேசக்காரன் சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி உழவாரப்பணி மேற்கொள்வது. அகண்ட பாரதம் சபதம் ஏற்பு நாள் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக்கப்பட்டது.
இதில் தெற்கு ஒன்றிய தலைவராக ஜெயசிங், ஒன்றிய பொது செயலாளர் மாயவனம் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கலியமுத்து செல்வ முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன் முத்து, ஒன்றிய துணைத் தலைவர்கள் இசக்கிமுத்து, மாரிமுத்து, ஒன்றிய செயற்குழு உறுப்பினராக முத்துக்குமார், செல்வகுமார், சங்கர் தட்டார் மடம் கிளை தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு பஞ்சாயத்திற்கு ஒரு பொறுப்பாளர் என ஒன்பது கிராமத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்தர், இணையதள மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திவான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.