• vilasalnews@gmail.com

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி!

  • Share on

சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில்  மாவட்ட அளவிலான  கிரிக்கெட் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது.  

இப்போட்டியில் மாவட்ட அளவிலான 16 அணிகள் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை சாத்தான்குளம்  ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தொடங்கி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை  நடந்த இறுதி போட்டியில்  திசையன்விளை அணியை எதிர்த்து  சிதம்பரபுரம் அணி மோதியது. இப்போட்டியை சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன் தொடங்கி வைத்தார்.

இதில் சிதம்பரபுரம் அணி முதல் பரிசும், திசையன்விளை இன்ஃபினிட்டி  அணி இரண்டாவது பரிசும், காரங்காடு அணி மூன்றாம் பரிசு, உடன்குடி அணி நான்காவது பரிசும், காரி கோவில் அணி  ஐந்தாவது பரிசு பெற்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில்  முதல் பரிசு பெற்ற சிதம்பரபுரம் அணிக்கு  ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ சார்பில்  வழங்கப்பட்ட ரூ.10,000 மற்றும் கோப்பையை மேற்கு வட்டாரத் தலைவர்  சக்திவேல் முருகன் வழங்கினார்.  இரண்டாம் பரிசு பெற்ற திசையன்விளை இன்ஃபினிட்டி  அணிக்கு  ஒன்றியக்குழு தலைவர்  ஜெயபதி ரூ.7,000 மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கினார்  . மூன்றாம் பரிசு பெற்ற காரங்காடு அணிக்கு ரூ.5,000 மற்றும் வெற்றிக் கோப்பையை இந்து முன்னணி பிரமுகர்  பால்பாண்டி வழங்கினார். நான்காம் பரிசு பெற்ற உடன்குடி அணிக்கு தொழிலதிபர் ஹென்றி பாண்டியன் ரூ.3,000 மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கினார். ஐந்தாம் பரிசு  பெற்ற  காரி கோயில்  அணிக்கு   சிதம்பரபுரம் ஸ்டார் ஹாய்ஸ் அணியினர் ரூ.2000 வாங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்ற  சிவக்குமார், ரவி சீதா ஆகியோருக்கு  ஜெயக்குமார் பரிசு வழங்கினர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

  • Share on