• vilasalnews@gmail.com

பொத்தக்காலன்விளை பள்ளிக்கு விளையாட்டு உபகரங்கள் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டதன் பேரில், பள்ளியின் முன்னாள் மாணவரான பாலமுருகன் பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள்.

பாலமுருகனின் இந்த நற்செயலை பாராட்டி பள்ளியின் தாளாளர் தந்தை ஜஸ்டின், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பூபால் ராயன் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரும் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளரும் பள்ளியின் முன்னாள் மாணவியுமான திருக்கல்யாணி, தாளாளர் தந்தையிடம் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான மாவட்ட பிரதிநிதி ஜெயசீலன், அருள்ராஜ், ராஜா, மற்றும் சித்திரை மாவட்ட  பொறியாளர் பிரிவு துணை அமைப்பாளர் டொமினிக், இளைஞரணி அமைப்பாளர் டைசன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

  • Share on

கொம்மடிக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

பரிவில்லிக்கோட்டையில் ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு கட்டிடம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on