• vilasalnews@gmail.com

லாரிகளை ஓரம் கட்டி ஓய்வெடுப்பது குற்றமா? தூத்துக்குடியில் லாரிகளில் தொடரும் டீசல் திருட்டு சம்பவம்!

  • Share on

தூத்துக்குடியில் லாரிகளில் டீசல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் வந்து செல்கின்றன. இந்த லாரிகள், புற நகர் பகுதிகளில் டிரைவர்கள் நிறுத்தி விட்டு ஓய்வு எடுப்பது வழக்கும். அப்போது, மர்ம நபர்கள் லாரிகளில் இருந்து டீசல்களை திருடும் சம்பவங்கள் நடந்தேறிவருகிறதாம்.

இந்தநிலையில் தான், சமீபத்தில் தாப்பாத்தி பகுதியில் நிறுத்தியிருந்த லாரியில் சுமார் 400 லிட்டர் டீசல் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக லாரி டிரைவர் முத்தையாபுரம் லேபர் காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதே போல், சில நாட்களுக்கு முன்பு மடத்தூர் பைபாஸ் சர்வீஸ் சாலையில் எப்போதும் வென்றான் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் லாரியை நிறுத்தியிருந்த நிலையில், அந்த வாகனத்திலும் 200 லிட்டருக்கும் மேல் டீசல் திருடுபோனதாக கூறுகிறார்.

தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள உப்பாற்று ஓடை திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மேம்பாலம் பகுதி வரை உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கனகர வாகனங்களிலும் இரவு நேரங்களில் டீசல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

  • Share on

குறுக்குச்சாலையில் தீ பற்றி எரிந்த லாரி : டிரைவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு!

  • Share on