• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலையில் தீ பற்றி எரிந்த லாரி : டிரைவர் உயிரிழப்பு!

  • Share on

குறுக்குச்சாலையில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை  தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரது மகன்  ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (38). இவருக்கு லிந்தாரூத்மேரி என்ற மனைவியும்,  ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி டிரான்ஸ்போர்ட் என்ற டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் டிப்பர் லாரியில் குறுக்கு சாலை பகுதியிலுள்ள தனியார் தார்  கம்பெனியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாரிக்கு நடை இல்லாத காரணத்தினால்  குறுக்குச்சாலை பகுதியில் உள்ள தனியார் தார் கம்பெனியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதில் லாரியில் உள்ள படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல் கருகி இறந்த நிலையில் இருந்த ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, டிப்பர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் : பகலில் வாழ்வாதார பணிகள்... இரவில் உரிமைப்போராட்டம்!

லாரிகளை ஓரம் கட்டி ஓய்வெடுப்பது குற்றமா? தூத்துக்குடியில் லாரிகளில் தொடரும் டீசல் திருட்டு சம்பவம்!

  • Share on