• vilasalnews@gmail.com

தந்தை, மகனை தாக்கியதாக நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on

சாத்தான்குளம் அருகே தந்தை, மகனை தாக்கியதாக நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தை சேர்ந்தவர் மிகாவேல்(58). இவரது மகன் கிறிஸ்டோ அதிபன்(25). இவர்கள் பேய்க்குளம் பஜாரில் தனியார் பால் ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில், மிகாவேல் ஆன்லைன்மூலம் தனியார் நிறுவனத்தில் ரூ.5லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் தொகையை மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் கடந்த 8 மாதமாக செலுத்தி வந்துள்ளார்.

 இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக 9வது தவணை தொகையை செலுத்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மிகாவேல், அவரது மகன் கிறிஸ்டோ அதிபன் ஆகியோர் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர், தவணை செலுத்தாதது தொடர்பாக மிகாவேலிடம் அவதூறாக பேசி கன்னத்தில் தாக்கினராம் .இதனை தடுக்க முயன்ற அவரது மகன் கிறிஸ்டோ அதிபனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மிகாவேல் சாத்தான்குளம்  காவல் நிலையத்தில் புகார்அளித்தார்.  உதவி ஆய்வாளர்  நாகராஜன், விசாரணை நடத்தி தந்தை, மகனை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் மீது வழக்குபதிந்து அவர்களை தேடிவருகின்றனர்.

  • Share on

பயணிகளை ஏற்றுவதில் போட்டி : தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே வாக்குவாதம்... பயணிகள் தவிப்பு

சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் : பகலில் வாழ்வாதார பணிகள்... இரவில் உரிமைப்போராட்டம்!

  • Share on