கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து பிற்பகல் 3.30 மணி அளவில் புறப்பட்டு திட்டங்குளம், எட்டயபுரம் மார்க்கமாக சோழபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு தனியார் பேருந்து 3.20 மணி அளவில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு எட்டயபுரம், சிந்தலக்கரை, பிள்ளையார் நத்தம், மார்க்கமாக விளாத்திகுளம் வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 10 நாட்களாக ஒரு தனியார் பேருந்து வழக்கத்திற்கு மாறான நேரத்தை விட முன்னதாகவே பேருந்தை எடுத்து பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதே போல் நேற்றும் தனியார் பேருந்து இயக்கப்படும் நேரத்தில் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இளம்புவனம் அருகே வரும் பொழுது ஒரு பேருந்து முந்திக்கொண்டு பயணிகளை ஏற்றி கொண்டு சென்றதாகவும் அங்கே இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்த பொழுது பின்னால் வேகமாக வந்த மற்றொரு பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வெளியே வராமல் குறுக்கே நிறுத்தி இரண்டு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வாக்குவாதத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் கோபம் அடைந்தனர். பொறுமை இழந்து கோபமடைந்த பயணிகள் இரண்டு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களையும் சத்தம் மிட்டனர். இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர்கள் உடனடியாக பயனிகளை ஏற்றிக்கொண்டு அந்தந்த வழித்தடத்தில் இயக்க பஸ்ஸை இயக்கி சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே பயணிகளை ஏற்றுவதில் ஏற்படும் தகராறில் பயணிகளை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.