தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பொன்பாண்டி (48) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25.07.2024 அன்று இரவு தனது ஆடுகளை வீட்டில் முன்பு உள்ள ஆட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். பின்பு மறுநாள் காலையில் பார்த்த போது அதில் ஒரு ஆடு காணாமல் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து பொன்பாண்டி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (38) மற்றும் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரீஸ்வரன் (24) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி பொன்பாண்டியின் ஆட்டை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்குபதிவு செய்து மணிகண்டன் மற்றும் மாரீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000 மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.