• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் தொடரும் வெறி நாய் கடி சம்பவம் : செம்மறி ஆடுகள் பலி!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வெறிநாய் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரை 18 க்கும் மேற்பட்ட நபர்களை கடித்துள்ளது. வெறி நாய் கடித்த நபர்களுக்கு புதியம்புத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில்  புதியம்புத்தூர் நடுவகுறிச்சி பகுதியில் பாக்கியராஜ் (45) என்பவர் டூவீலர் மற்றும்  கார் வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். அவரது வாட்டர் சர்வீஸ் செட் அருகில் மூன்று செம்மரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். அப்போது, ஆடுகள் செட்டுக்கு வெளியே கட்டி போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் செட்டுக்குள் பாக்கியராஜ் தூங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 12.30 மணி அளவில் ஆடுகளின் சத்தம் கேட்டதை அடுத்து பாக்யராஜ் வெளியே வந்து பார்த்தபோது நாய் ஆடுகளை கடித்து விட்டு ஓடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே இரு செம்மறி ஆடுகள் உயிரிழந்தது . ஒரு செம்மறி ஆட்டிற்கு புதியம்புத்தூர் கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெறி நாய்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதே போல், இன்று அதிகாலை நேரத்தில் புதியம்புத்தூர் இசக்கிஅம்மன் கோவில் அருகில் கறி வாங்க சென்ற நபர்களை வெறி நாய் கடிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளதாம். 

வெறிநாய் தொல்லை குறித்து பாக்கியராஜ் கூறுகையில்:-

கடந்த இரு தினங்களாக வெறிநாய் கடித்து  பல பேர் காயம் அடைந்த நிலையில் என்னுடைய ஆடுகளை வெறிநாய் கடித்துள்ளது. இதில் இரு ஆடுகள் பலியான நிலையில்  ஒரு ஆட்டிற்கு  வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெறிநாயால் புதியம்புத்தூர் பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க கி.மீ கணக்கில் சுற்றிவர வேண்டிய அவலநிலை - தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் கோரிக்கை இதுதான்!

கோவில்பட்டியில் மகாத்மா காந்தி இரத்ததான அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்!

  • Share on