• vilasalnews@gmail.com

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க கி.மீ கணக்கில் சுற்றிவர வேண்டிய அவலநிலை - தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் கோரிக்கை இதுதான்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமம் அமைந்துள்ளது. தெற்கு வீரபாண்டியபுரம் கிராம பகுதி பொதுமக்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெற்கு வீரபாண்டியபுரம் வழியாக தூத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றன. 

இந்த நிலையில், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனம் முன்பாக, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டதிலிருந்து தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் அகற்றப்பட்டு  ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு வாகனங்கள் கடந்து செல்வதற்காக, நடுவில் இடம் விடப்பட்டிருந்த நிலையில், கடந்த  சில வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பாதையானது அடைக்கப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தாண்டி பாதை வசதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டப்பிடாரம் மற்றும் தெற்கு வீரபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்  இந்த வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வீணாக சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. 


இதனால் வாகன ஓட்டிகள் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் தவறான முறையில்  சென்று  சாலையை  கடந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு  ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனம் முன்பாக ஏற்கனவே இருந்தது போல ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு வாகனங்கள் கடந்து செல்வதற்காக, நடுவில் இடம் விட்டு பாதை வசதியை மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெற்கு வீரபாண்டியபுரம்  கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மேலும்  இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற  உங்களை தேடி உங்கள் ஊரில்  திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது . எனவே பாதை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அப்பகுதி மக்கள், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வரும் 30ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

புதியம்புத்தூரில் தொடரும் வெறி நாய் கடி சம்பவம் : செம்மறி ஆடுகள் பலி!

  • Share on