• vilasalnews@gmail.com

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தந்தை உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை!

  • Share on

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ .ராஜூவின் தந்தை ஆசிரியர் செல்லையா சொந்த ஊரான கடம்பூர் சிதம்பரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வயது  முதிர்வால் கடந்த வியாழக்கிழமை மதியம் இயற்கை எய்தினார். 

இதனைத்தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இந்தநிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு இன்று காலை கடம்பூர் சிதம்பரபுரத்தில் உள்ள கடம்பூர் ராஜூ இல்லத்திற்கு நேரில் வந்து மறைந்த ஆசிரியர் செல்லையா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வரும் 30ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

  • Share on