தூத்துக்குடி ஜெயலானி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் . இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் செல்சீனி காலனி பகுதியில் உள்ள குடோனில் பழைய பொருட்களை சேமித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை பழைய பொருட்கள் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.
இதற்கிடையே விரைந்து வந்த அவர்கள் குடோனை பார்த்தபோது உள்ளே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிகிறது.
தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகில் உள்ள காலி இடத்தில் காய்ந்த கருவேலமரங்களை எரிந்த போது ஏற்பட்ட தீயிருந்து குடோனுக்கு தீ பரவியதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.