கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி ஸ்ரீ பூவனநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அம்மன் செண்பகவல்லி பிரதிஷ்டை நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு பால்குடத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேல் தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.