• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1131 மனுக்கள்!

  • Share on

முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1131 மனுக்கள் பெறப்பட்டது. 

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் , சாஸ்தாவிநல்லூர், சுப்பராயபுரம், தச்சமொழி, பண்டாரபுரம் ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் சாத்தான்குளம் அருகே முதலூர் டிஎன்டிடிஏ  தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளியில்   நடைபெற்றது. 

முகாமுக்கு  ஒன்றியக்குழு தலைவர்  ஜெயபதி தலைமை வகித்தார்.  ஒன்றிய கவுன்சிலர் மீனா முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை வரவேற்றார். முதலூர் ஊராட்சித் தலைவர் பொன் முருகேசன் முகாமை தொடங்கி  வைத்தார். இதில் திருச்செந்தூர்  கோட்டாட்சியர்  சுகுமாரன், சாத்தான்குளம்  வட்டாட்சியர்  இசக்கிமுருகேஸ்வரி, பள்ளி தாளாளர் சாந்தராஜா, தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் 5 ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு  முகாமில் பங்கேற்ற அனைத்துதுறை அதிகாரிகளிடம் குறை மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,  உரிமைத்தொகை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். இம்முகாமில் 1131 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

முகாமில் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டாக்டர் சுவிட்லி தலைமையிலான நடமாடும் மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர். மக்களைத்தேடி திட்ட பணியாளர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொதுமக்களுக்கு பார்த்தனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமையிலான குழுவினர் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 

இதில் ஊராட்சித் தலைவர்கள் சுயம்புதுரை, திருக்கல்யாணி, பிரேம்குமார், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி,  உள்ளிட்ட ஊராட்சி செயலர்கள் முருகேசன், ஜஸ்டின், பிரமநாயகம்,  உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  ஒன்றிய  ஆணையாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

  • Share on

சாத்தான்குளம் அருகே மஞ்சள்நீர் அபிஷேகம்!

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் பால்குடம் உற்சவம் விழா!

  • Share on