சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் மோடிநகரில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாவட்ட செயலர் அருணாசலம் மஞ்சள் நீர் அபிஷேக பூஜையை ஆரம்பித்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில செயலர் வழக்கறிஞர் குற்றாலநாதன், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர் பிரம்ம நாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவை முன்னிட்டு பெண்கள், பெரியோர்கள், சிறுவர், சிறுமிகள் குடத்தில் மஞ்சள் நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள் நீர் அபிஷேகத்தை முத்துலட்சுமி , இந்து அன்னையர் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ராமகனி ஆகியோர் வழி நடத்தினர்.
இதில் மோடி நகர் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் அமராவதி, அன்பு செல்வி, இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்தர், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.