தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் (பொறுப்பு) விநாயகம் ஆலோசனை பேரில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான அதிகாரிகள் இரவு சாத்தான்குளம் பன்னம்பாறை விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றிய 3 சரக்கு டாரஸ் லாரிகளை சோதனை செய்தார். அந்த மூன்று லாரிகளும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த லோக்கல் பெர்மிட் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. லோக்கல் பெர்மிட் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காகவும் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்த லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தெரிவித்தார்.