சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வு, நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் சில மாதங்களாக வழங்கப்படாது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக மாநில அரசு உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் நகர செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், லூக்காஸ் பிரேம்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் முன்ளிலை வகித்தனர். நகர பிரதிநிதி இசக்கிமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட இணை தலைவர் சித்திரைராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், மாயாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சியாமளா வண்ணன், மாவட்ட மகளிரணி பேச்சியம்மாள், வாசுகி, மாவட்ட தொழிற் சங்கம் செல்வன், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் சாத்ராக், உடன்குடி நகர செயலாளர் காதர் முகைதீன், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் குமரன், காயல்பட்டினம் நகர செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.