நாசரேத் தண்ணீர் கம்பெனியில் தண்ணீரில் கலப்படம் செய்த 4 பேருக்கு ரூ40,000 அபராதம் விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத்தைச் சேர்ந்த காபிரியேல் என்பவர் சரஸ்வதி அக்வா தண்ணீர் கம்பெனி நடத்தி வந்தார். இவரது தண்ணி கம்பெனியில் சோதனை செய்த ஆழ்வார் திருநகரி உணவு பாதுகாப்பு அதிகாரி ஜோதி பாசு என்பவர் தண்ணீர் கம்பெனியில் கலப்படம் செய்தது கண்டுபிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் கலப்படம் செய்தது நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா கலப்படம் செய்த காபிரியல், குருநாத பாண்டியன், பொன்மலர், உமா ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் ஒரு நாள் நீதிமன்ற காவலும் விதித்து தீர்ப்பு கூறினார்.