ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
பயிற்சியில் ஒன்றியத்திற்குட்பட்ட 120 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான அடிப்படை திறன்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஒன்றியத்திற்குட்பட்ட நான்கு ஆசிரியர்கள் செயல்பட்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு மதிய உணவு மற்றும் பயிற்சி கட்டகம் வழங்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தனம், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் மஞ்சுளா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.