தமிழ்நாடு அரசு சிறுபான்மை நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக வழக்கறிஞர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் அறிவுறுத்தலின்படியும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் வேதமுத்து வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க ஒருங்கினைப்பாளர் ஆண்டரூஸ் ஞானகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் ஜோனத்தான் குனார்த்தனன் ஆகியோர் சிறுபான்மை நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜாவை, சந்தித்து தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.