• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க முப்பெரும் விழா : ஓய்வூதியம் வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு,  நிர்வாகிகளுக்கு பாராட்டு, உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்பட  முப்பெரும் விழா சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, லட்சுமி, சங்கரலிங்கம், கசாலி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவில்பட்டி ஒன்றிய தலைவர் சிவபாலன் அனைவரையும் வரவேற்றார்


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதில், மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநிலத் துணைத்தலைவர் பழனிச்சாமி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் மகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்புராஜ், லிங்கேஸ்வரி, மணி, ரத்தினவேல், குமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் பாலகுமார் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியவர் கைது - திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!

சிறுபான்மை நல பொருளாதார மேம்பாட்டு கழக தலைவருக்கு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் வாழ்த்து!

  • Share on