• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியவர் கைது - திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி வானியன்விளை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (64) என்பவர் கடந்த 20.07.2024 அன்று பக்கத்து தெருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு மறுநாள் (21.07.2024) காலையில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 சவரன் நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூபாய் 55,000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காந்தி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  சிவக்குமார் மற்றும் மாரிமுத்து, தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஏ.சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மப்பாண்டி (32)  என்பவர் மேற்படி காந்தியின் வீட்டிற்கு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் உடனடியாக  சேர்மபாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள், கை கடிகாரம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியவரை கைது செய்து, தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  வெகுவாக பாராட்டினார்.

  • Share on

புதியம்புத்தூரில் பொதுமக்களை துரத்தும்வெறி நாய் : 11 பேர் காயம்!

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க முப்பெரும் விழா : ஓய்வூதியம் வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை!

  • Share on