• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுதாகர் (42).  இவரது மணைவி வேல்கனி (33). இவர்களுக்கு  திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. மேலும் சுதாகர் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார்.


இந்நிலையில் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகுந்த மன வருத்தத்தில் சுதாகர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மனைவி வேல்கனி தனது அம்மாவை பார்க்க தூத்துக்குடி சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த சுதாகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


சுதாகரின் அக்கா சின்ன புஷ்பம் என்பவர் சாப்பாடு கொண்டு வந்த போது சுதாகர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுதாகரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பரிசோதித்தபோது, மருத்துவர்கள் சுதாகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கு தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க ரயில் பயணிகள் கோரிக்கை!

இளவேலங்கால் கிராமத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலகம் - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்!

  • Share on