• vilasalnews@gmail.com

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை தட்டியது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு "தமிழ்நாடு முதலமைச்சரின்” சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை  வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து "தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை  26.07.2024 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி இதே போன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

  • Share on

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கடைக்குள் புகுந்த மான் - பொதுமக்கள் மீட்டு வனத்துறை இடம் ஒப்படைப்பு!

உஷார் மக்களே | ஆன்லைனில் ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என ரூ.55.50 லட்சம் மோசடி செய்த குஜராத் வாலிபர் இருவர் கைது!

  • Share on