தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது அதில் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.
அதனைப் பார்த்த தெரு நாய்கள் மானை துரத்தி உள்ளது. இதனையடுத்து தர்மராஜ் மற்றும் பொதுமக்கள் துரத்திய நாய்களை விரட்டி விட்டு மானை பத்திரமாக பிடித்து கடையில் வைத்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். வனத்துறையினர் வந்து மானை பத்திரமாக மீட்டு வல்லநாடு மான்கள் சரணாலயத்தில் பத்திரமாக விட்டனர்.