• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலையில் மதுபோதையில் டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்கிய வாலிபர்கள் இருவர் கைது!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று இரவு வந்த அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை, கொங்கராயன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் (55) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் நடத்துனராக ஓட்டப்பிடாரம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த மணி (52) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்தானது நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை பகுதியில் வந்துள்ளது. அப்போது கோவில்பட்டியைச் பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மகேஷ் குமார் (22) ஆகிய இரு வாலிபர்களும் கோவில்பட்டியில் இருந்து குறுக்குசாலைக்கு பயண சீட்டு பெற்றுள்ளனர். ஆனால், குறுக்கு சாலையில் அவர்கள் இறங்காததால் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது வாலிபர்கள் மற்றும் பேருந்து நடத்துனர், டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த இரு வாலிபர்களும் டிரைவர் மற்றும் நடத்துனரை குடி போதையில்  தாக்கியுள்ளனர்.இதை அடுத்து சக பயணிகள் டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்கிய இரு வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் இரு வாலிபர்களையும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்!

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கடைக்குள் புகுந்த மான் - பொதுமக்கள் மீட்டு வனத்துறை இடம் ஒப்படைப்பு!

  • Share on