ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மூன்று மின் கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவில் அருகில் மூன்று மின்கம்பங்கள் அமைந்துள்ளது. இதில் மூன்றும் மிகவும் மோசமான நிலையில் கான்கிரீட் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. மேலும் எப்போதும் வேண்டுமானாலும், கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பழுதான மின் கம்பங்களை அகற்றி உடனடியாக புதிய மின்கம்பங்களை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.