ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளராக பொத்தகாலன்விளை லூர்து மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் ஐஎன்டியூசி மாநிலச் செயலாளராக இருந்த லூர்து மணி, மாநில பொதுச் செயலாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஒப்புதலின் பேரில் ஐஎன்டியூசி மாநில தலைவர் சிவப்பிரகாசம் நியமித்து அறிவித்துள்ளார்.
பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லூர்துமணிக்கு, மாநில வழக்கறிஞர் பிரிவு இணைத் தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியன், ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், தெற்கு வட்டார துணைத் தலைவர் கள் அன்ன கணேசன், செல்வச் ஜெகன், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் விஜய், வட்டார பொதுச் செயலாளர் ஜேம்ஸ் அகஸ்டின் , வட்டாரச் செயலாளர்கள் டார்வின், லாரன்ஸ், மகிழன், ராஜா, அலெக்ஸ்ராஜா, சேவா தள வட்டாரத் தலைவர் வண்ணமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.