ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு கரிசல், வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தங்களது கிராமங்களில் அருகில் உள்ள குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரிசல் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துக் கொள்வதற்கான ஆணையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விவசாயிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் நடைபெறும் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்து தரமாகவும் விரைந்து கட்டிடங்களை கட்டிடவும் ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் இளையராஜா வட்டாட்சியர் சுரேஷ், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, உட்பட பலர் கலந்து கொண்டனர்