எட்டயபுரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின்பஜார், மேலவாசல், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து எட்டயபுரம் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆலோசனையின் படி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பூவையா மற்றும் அதிகாரிகள் பணியாளர்களுடன் ஆய்வு நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.