தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சேதுராஜபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் ராஜ் (70). இவர் தனது இருசக்கர வாகனத்தில் நாகலாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்த சென்றபோது, விளாத்திகுளத்தில் இருந்து புதூர் நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், ராஜ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இதுகுறித்து விளாத்திகுளம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் முத்து மகன் அங்குராஜ்(32) என்பவரிடம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.