சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் மகன் சுரேஷ் (22). இவர் ஐடிஐ முடித்து சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தில் உள்ள சோலார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவரது அம்மாவிடம் இரவில் வேலை இருப்பதால் மறுநாள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்து சென்றாராம். மறுநாள் அவரது அண்ணி மீனாவுக்கு கைப்பேசியில் பேய்க்குளம் அருகே உள்ள பெட்ரோல் பல்க் பின்புறம் உள்ள இடத்தில் பூச்சி கொல்லி விஷம் குடித்து கிடப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். உடனே மீனாவும், சுரேஷின் தாயார் செல்வி (53) ஆகியோர் ஆட்டோவில் வந்து அவரை மீட்டு ஸ்ரீவைகுணடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் செல்வி சாத்தான்குளம் காவல் நிலையத்தி்ல அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜீன்குமார் வழக்குபதிந்து, அவர் எதற்காக விஷம் குடித்தார் உள்ளிட்டது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.