தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி தலைமையிலான போலீசார் நேற்று (19.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முடிவைத்தானேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (28), முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை (24) தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கனி மகன் மகாகிருஷ்ணன் (எ) மந்திரி (26), திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அங்குபாண்டி மகன் பொன்முத்துராம் (21), மேலதட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (20) மற்றும் புதுக்கோட்டை வர்த்தகரெட்டிபட்டியைச் சேர்ந்த குருசாமி மகன் சிவகுருநாதன் (21) ஆகியோர் என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் மாடசாமி, முத்துமாலை, மகாகிருஷ்ணன் (எ) மந்திரி, பொன்முத்துராம், ராஜபாண்டி மற்றும் சிவகுருநாதன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.