விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 23.06.2024 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் எட்டையாபுரம் நீராவி புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முனியபிரபாகரன் (25) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குபதிவு செய்து கைது செய்து செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட முனியபிரபாகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எட்டையாபுரம் நீராவி புதுப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முனியபிரபாகரன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.