தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சுப்ரமண்ய பாலச்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜ், முகிலரசன் மற்றும் போலீசார் நேற்று (19.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி 3சென்ட் அந்தோனியார்புரம் பகுதியில் சேர்ந்த வெட்டுபெருமாள் மகன் ராஜா (எ) வெட்டுராஜா (39), தூத்துக்குடி தாமஸ்நகரை சேர்ந்த சைமன் மகன் டுவின்ஸ்டன் (53) மற்றும் தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன் (47) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கடத்தியதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ராஜா (எ) வெட்டுராஜா, டுவின்ஸ்டன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.