குறுக்கு சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் துரித உணவு கடை உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை (32) என்பவர் குறுக்குசாலையில் துரித உணவு கடை நடத்தி வருகிறார். இவர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை குறுக்குச்சாலை ஜங்ஷன் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, கச்சேரி தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்(60) என்பவர் ஓடிவந்த பைக்குடன் மோதிய விபத்தில் வெள்ளத்துரை தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் வெள்ளத்துரையை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, வெள்ளத்துரை அளித்த அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.