விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் கொடை விழா மற்றும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. லீக் ஆட்ட முறையில் நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும், சென்னை, ஒட்டன்சத்திரம், ஈரோடு, அந்தியூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளில் இருந்தும் பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் போட்டியை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் இரு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தை பார்வையாளர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். குளத்தூரில், கோவில் கொடை விழாமேடை முன்னிட்டு நடைபெற்ற இந்த தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.