ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வாபஸ் பெறப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் சாலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று பதிலளித்து வருகிறார்.
அப்பொழுது பொதுமக்களின் கோரிக்கை மனு ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நேரில் வந்து பார்க்கவோ வருத்தம் கூட தெரிவிக்காதவர்கள் தான் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார்.