காஷ்மீர் லடாக் பகுதியில் விபத்தில் பலியான கோவில் பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆறுதல் கூறி, கண்ணீர் விட்டு அழுதார் .
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று காலை நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதையெடுத்து, அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ 5 லட்சம் கருப்பசாமி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதன் பின்னர்,
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் :
14 ஆண்டுகளாக இராணவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றிய கருப்பசாமி விபத்தில் பலி என்பது அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல வேதனைக்குரியது. அவருடைய இழப்பு அவருடைய வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் வேதனை அளிக்ககூடியது.
கருப்பசாமி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் சார்பில் ஆறுதல் மற்றும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளோம். இராணுவ த்திடம் இருந்து முழு தகவலையும் பெற்றவுடன், கருப்பசாமி குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் உதவிகளை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தனது சொந்த நிதியில் இருந்து நிதி வழங்கியு ள்ளதாகவும், கருப்பசாமியின் மனைவியின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க முதல்வரிடம் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு வழங்கும் நிதியுதவி மட்டுமின்றி, கருப்பசாமியின் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் உதவி செய்யப்படும் என்றார்.
கருப்பசாமி குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆறுதல் கூறி கொண்டு இருந்த போது, கருப்பசாமியின் குழந்தைகள் அழுவதை பார்த்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவும் கண்ணீர் விட்டு அழு தொடங்கினார். பின்னர் தன்னை தேற்றி கொண்டு, குழந்தை அழைத்து ஆறுதல் கூறினார்.