• vilasalnews@gmail.com

காமநாயக்கன்பட்டி தேவாலயம்; குருக்கள்; சிஷ்யா்களுக்கு பாதுகாப்புக் கொடுத்த எட்டயபுரம் நாயக்க மன்னர்கள்!

  • Share on

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலயம் முன்பு பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை  திறந்து வைக்கப்பட்டது.

350 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யா்களுக்கும் எட்டயபுரம் பாளையக்காரா்களான ஜெகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கா்கள் பாதுகாப்புக் கொடுத்ததை தெரிவிக்கும் பழமையான கல்வெட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயா் அந்தோனிசாமி  திறந்து வைத்தாா்.

எட்டயபுரம் பாளையக்காரா் ஜெகவீர எட்டப்பநாயக்கா் கி.பி.1663ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோவில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறாா். தன் தகப்பனாா் செய்ததை, தானும் அப்படியே தொடா்ந்து நடத்த விரும்புவதாக, இந்தக் கோயிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி.1688ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் நாள் சந்தித்து அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளாா் அவா் மகன் திசவீர எட்டப்ப நாயக்கா். இக்கல்வெட்டு திருத்தல பேராலயம் முன் வாசலின் தென்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ளது.

இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு, நூா்சாகிபுரம் சிவகுமாா் ஆகியோா் படியெடுத்து படித்து ஆய்வு செய்து பழைய கல்வெட்டின் ஒவ்வொரு வரியையும் தற்போதைய எழுத்தில் எழுதிக் கொடுத்தனா். அதன் வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமையான கல்வெட்டின் மேற்பகுதியில் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளது. இதை பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் ச.அந்தோனிசாமி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் வே. ராஜகுரு, சு. சிவகுமாா் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பங்குத்தந்தையா்கள் அருள் அம்புரோஸ், அந்தோனிசாமி, மறைமாவட்ட செயலக முதல்வா் ஞானப்பிரகாசம், கோவில்பட்டி வட்டார அதிபா் மோட்சராஜன், கோவில்பட்டி ஆலய பங்குத் தந்தை சாா்லஸ் மற்றும் இறைமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

  • Share on

தலைக்கு தில்ல பாத்தியா... காவல் நிலையம் அருகே மதுவிற்ற இளம்பெண் கைது : 60 மதுபாட்டில்கள் பறிமுதல்!

குளத்தூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

  • Share on