• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : அமோனியா வாயு கசிவால் பெண் பணியாளர்கள் மயக்கம்!

  • Share on

தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் உள்ள கடல் உணவுகளை பதப்படுத்தும் ஆலையில் நேற்று (ஜூலை 19) இரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. இதில் கடலில் பிடித்து வரக்கூடிய மீன் உள்ளிடவைகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் இந்த மீன் பதப்படுத்தி ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ( ஜூலை 19)  நள்ளிரவில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து எற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக மீன்களை குளிரூட்டுவதற்கு பயண்படுத்தக்கூடிய வாயு குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரவு பணியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

தலைக்கு தில்ல பாத்தியா... காவல் நிலையம் அருகே மதுவிற்ற இளம்பெண் கைது : 60 மதுபாட்டில்கள் பறிமுதல்!

  • Share on