தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ராஜிவ் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் ( 40 ). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று ஆட்டோவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, உப்பாற்று ஓடை அருகே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.