சிறந்த கல்வி சேவையாற்றிய விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளிக்கு அன்னை பத்ரகாளி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட விருதினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
விருதுநகரில் செயல்பட்டு வரும் அன்னை பத்ரகாளி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் சிறந்து கல்வி சேவையாற்றும் 10 அரசு உதவி பெறும் பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி நடப்பாண்டு சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி தேர்வு பெற்றதையடுத்து விருதுநகரில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்று அப்பள்ளி செயலர் எஸ்.ஏ. திருமணியிடம் விருது வழங்கி கௌரவித்தார். இதில் அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற பள்ளி செயலர் எஸ்.ஏ. திருமணியை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.