• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிழவி பட்டியில் ஸ்ரீ மலை அலங்காரி அம்மன், புது அம்மன், துர்க்கை அம்மன் மற்றும் மலையடி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. 

இதனை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை  பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறிய மாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. கோவில்பட்டி - பசுவந்தனை சாலை இடையே  நடைபெற்ற இப்போட்டியை  சாலையின் இரு புறங்களிலும் இருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.


சின்ன மாட்டு வண்டி போட்டியில் கலிங்கப்பட்டி காளியம்மாள் மாட்டுவண்டி முதலிடத்தை பெற்றது. 2வது இடத்தை கே துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் மாட்டு வண்டியும், மூன்றாவது இடத்தை கடம்பூர் கருணாகரா ராஜா  வண்டியும் பிடித்தன.

பூஞ்சிட்டு பிரிவில் முதலிடத்தை கயத்தாறு எஸ்பி ஹோட்டல் மாட்டு வண்டியும், இரண்டாவது இடத்தை சுப்புலாபுரம் குரு கார்த்திகேயன் மாட்டு வண்டியும், 3வது இடத்தை  துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் மாட்டு வண்டியும் பெற்றன. 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • Share on

சாத்தான்குளம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து!

சிறந்த கல்வி சேவையாற்றிய விஜயராமபுரம் பள்ளிக்கு விருது : தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கினார்!

  • Share on