• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து!

  • Share on

சாத்தான்குளம் அருகே இரு வெவ்வேறு தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு மீட்பு துறையினர் விரைந்து  வந்து தீயை அணைத்தனர். 

சாத்தான்குளம்  அருகே உள்ள  ராஜமன்னார்புரம்  ராபின்சன்  என்பவரது தோட்டத்தில் வேலி பகுதியில் திடீரென  தீ பிடித்து எரிந்தது. காற்றில் வேகமாக  தீ பரவியது. இதனையடுத்து தகவலின் பேரில் சிறப்பு நிலைய அலுவலர் ஹோரில் தாமஸ் செல்வபாபு தலைமையில் வீரர்கள் சதிஷ்குநமார், தவசிராஜ், அருள்முருகன், சுப்பிரமணியன், சீனிவாசன், பிரவீன், வைகுண்டம், முத்துமாரி ஆகியோர் விரைந்து சென்று தீயை மேலும் தடுத்தனர். 

இதேபோல், சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு  முத்துராஜ் என்பவரது ஆனந்தபுரத்தில் தோட்டத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது.  தகவலின் பேரில்  தீயணைப்பு வீரர்கள்  சென்று தீயை அணைத்தனர்.

  • Share on

சாத்தான்குளம் அருகே பச்சிளம் குழந்தை திடீர் உயிர் இழப்பு : போலீசார் விசாரணை!

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

  • Share on