• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே பச்சிளம் குழந்தை திடீர் உயிர் இழப்பு : போலீசார் விசாரணை!

  • Share on

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே முத்து கிருஷ்ணாபுரம் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் பாலசுந்தர விநாயகம். இவர் திருச்சியில் ஐடிநிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கல்யாணி(30). இவர்களுக்கு 4 வயது ஆண்குழந்தை மற்றும் செந்தமிழ் செல்வன் என்ற இரண்டரை மாத குழந்தை உள்ளது.

இதில், 2வது குழந்தை பிறந்ததை தொடர்ந்து கல்யாணி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்   குழந்தை இரண்டரை மாத குழந்தையான செந்தமிழ்செல்வன், தாய்ப்பால் குடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலை பச்சிளம் குழந்தை, திடீரென மயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் கல்யாணி மற்றும் அவரது பெற்றோர், குழந்தையை சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்  எட்வின்அருள்ராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

யார் இந்த மெடிக்கல் விஜயகுமார்?இவரை கொண்டாடி தீர்க்க இப்படியொரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறதா?

சாத்தான்குளம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து!

  • Share on